இராணிப்பேட்டை மாவட்ட மூத்த குடிமக்களுக்கான காவல் துறை சிறப்பு ஏற்பாடு சேவை எண் 9498180972
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 235 மூத்த குடிமக்கள் வசிக்கின்ற வீடுகள் கண்டறியப்பட்டு , அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரோந்து காவலர்கள் தினமும் அங்கு சென்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கும் இடங்களில் பட்டா புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு, பாதுகாப்பு, அறிவுரை ஆகியவற்றை காவல் துறையினர் வழங்க உள்ளனர். மேலும் இதற்கென பிரத்யேகமாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்
9498180972 என்ற எண், இந்த சேவைக்காக தொடங்கப்பட்டு இருக்கிற முத்த குடிமக்கள் மட்டுமின்றி ஏனைய பொது மக்களும் ஊரடங்கு பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் .
முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேற்கண்ட பொருட்களை வீடுகளிலும் தெருக்களிலும் வந்து விற்பனை செய்ய இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தகுந்த காரணங்களின்றி வெளியே வரும் பொது மக்கள் மற்றும் வீணாக சுற்றி திரியும் நபர்கள் ஆகியோர் மீது அபராத வழக்குகள் மட்டுமின்றி இந்திய தண்டனை சட்டப்பிரிவு வழக்குகளும் போடப்படும் - விதிமுறை மீறி வருகின்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும்.
தகுந்த காரணங்களோடு வெளியே வரும் பொதுமக்கள் கூட முக கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியில் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்த முழு ஊரடங்கை தாங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.